வானிலை என்பது யாது?/ General Knowledge Questions/ TNPSC Questions / What is Weather/
வானிலை என்பது யாது? வளி மண்டலத்தினுடைய இயல்பியலில் அன்றாடம் ஏற்படும் மாற்றங்களைக் கணித்து இது கூறப்படுகிறது. வெப்பத்தையும் அழுத்தத்தையும் சீர்ப்படுத்த, வளி மண்டலம் இடைவிடாது காற்றைக் கலந்து கொண்ட இருக்கிறது. இந்தக் கலப்புதான் வானிலையை ஏற்படுத்துகிறது. நிலத்தைவிட நீர் மெதுவாகவே வெப்பமடையவும் குளிர்ச்சியடையவும் செய்யும். அதனால் கோடையில் நீர் நிலத்தைவிடக் குளிர்ச்சியாக இருக்கும். ஒரு பகுதிக்குக் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவை பூமி தனது அச்சில் சாய்ந்திருப்பது நிர்ணயிருக்கிறது. துருவங்களுக்கு அருகில் சூரியக் கதிர்களுடைய விளைவு குறைவாக இருக்கும். இதனால் வட, தென்கோடிகளில் குளிர் காற்று பூமத்திய ரேகைகருகே வெப்பக் காற்றும் அதிகமாகும். வானிலையை மதிப்பிடுவதற்கு பல அம்சங்களைக் கணக்கெடுக்கு வேண்டியுள்ளது. இவற்றுள் முக்கிய மானவை தட்ப வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம், வீசும் காற்று ஆகியவையாகும். எல்லா அம்சங்களையும் அராயந்தே வானிலை முன்னறிவிப்புகள் செல்லப்படுகின்றன. நன்றி! அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை நான் உங்கள் - பா.அ. ஜெயசுதர்ஷன்