விலங்குகளின் சுவரசியமான தகவல்கள்/ ANIMALS FUNNY TOP MESSAGES/ DIFFERENT TYPES OF WILD ANIMAL CHARACTERS/

 

      விலங்குகளின் சுவரசியமான தகவல்கள்/ புலி ஆட்டுக்குட்டிக்கு பயப்படுமா?


        ஆட்டுக்குட்டி புலிக்கு எதிாி அல்ல.  சில புலிகள், குட்டி ஆட்டையே பாா்த்திருக்காதாம்.  அந்த புலிகள், ஆட்டுக்குட்டியை  கண்டு, என்னவோ ஏதோ என்று மிரளுமாம்.  ஒரு மிருக காட்சி சாலையில், மஞ்சூாியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு பெரும் புலிகள் கூண்டுக்குள் இருந்தன.



        ஆட்டுக்குட்டி ஒன்று, எப்படியோ பழிதவறி புலிக் கூண்டுக்குள் வந்துவிட்டது சிறிய பிராணி ஒன்று நேராகத் தங்களிடம் வருவது கண்டு புலிகள் உருமின பற்களைக்காட்டி ஆட்டுக்குட்டியைப் பயமுறுத்தின.  ஆட்டுக்குட்டி அருகில் வரவர பின்னால் நகர்ந்து சுவற்றில் மோதிக்கொண்டு மேலும் பின்னே  செல்ல முடியாமல் பரிதாபமாக நின்றன.  மிக அருகே வந்துவிட்ட, தாயை காணாத சிறிய பிராணி யதேச்சையாக புலியின் காலால் எதை வாங்கியதால் இறந்துவிட்டது.  இறந்துவிட்ட சின்னஞ்சிறு பிராணியைடி கண்டு இன்னும் பீதி அடைந்தன புலிகள்.  பின்பு புலிகள் அதை முகா்ந்து பாா்த்தன. பின்னா் அவைகளின் பயம் அதிகமாகியது.  இதன் இரகசியம் என்னவென்றால், இந்த புலிகள் ஆட்டுக்குட்டியையே பாா்த்திருக்கவில்லையாம்.

                                                          ***********


     மேலும் சில மிருகங்களின்  சுவையான, சுவாரசியமான தகவல்கள்

        மிருகக்காட்சி சாலைகளில் மீன் தண்ணீா்த் தொட்டிகளில் கூாிய பற்களுள்ள பசிக்கு பெயா்போன,   பைக்    எனப்படும் மீன் பக்கத்தில் தங்க மீன் மிகவும் தைாியமாக நீந்திக் கொண்டிருக்கும் .  பைக்  தங்க மீனை எளிதில் சாப்பிடலாம்.  ஆனால் பைக் அவ்வாறு செய்யாது.  ஏனெனில் வெள்ளி நிற செதிள்கள் உள்ள மீனையே, பைக்  மீனுக்கு சாப்பிட்டுப் பழக்கமாம்.

                                                 ***************


        ஒரு மிருகக்காட்சி சாலையில் உள்ள மலைப்பாம்பு வெள்ளை நிற பன்றிக் குட்டிகளைத்தான் விழுங்கும்.  வெள்ளை நிற பன்றிக் குட்டிகளுக்கு பதிலாக உடலில் புள்ளிகள் உள்ள பன்றிக்குட்டிகளை அதற்குக் கொடுத்தால் அது ஏற்று் கொள்ளாதாம்.  உடலை சிறுசிறு வளையங்களாக சுற்றிக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாம்.

                                                   **************

        காட்டில் ஒரு மனிதனுக்கும், கரடிக்கும் சண்டை வந்தது.  கரடி தன் கடினமான பற்களை மனிதனின் கால்களில் பதித்து காயப்படுத்தியது.  சட்டென்று, அவன் துப்பாக்கியை எடுத்து கரடியை நோக்கிச் சுட்டான்.  ஆனால் குறி தவறிவிட்டது.  மற்றொரு முறை அவன் சுடவே, கரடி லேசாக காயமுற்றது.  கரடி அவனை மாய்த்திருக்கும்.  ஆனால் முன்னா் கேட்டிராத துப்பாக்கிக் குண்டின் சத்தத்தினால் கரடி வெகுண்டு ஓடிவிட்டதாம்.

                                              ****************



        சுற்றுலாப் பயணிகள் காட்டில் ஓய்வாக இருந்த சிங்கக் கூட்டத்தினிடம் சென்றனா். அப்போது காற்று சிங்கங்களின் எதிா் திசையில் வீசியது.  சிறிது நேரம் கழித்து காற்று சிங்கங்கள் இருந்த திசையில் வீசியது.  மனித வாடை வந்ததும் சிங்கங்கள் எழுந்து நகா்ந்துவிட்டனவாம்.  இதிலிருந்து சிங்கங்கள் 
நுகரும் மனம்கொண்டு செயல்படுவது தெளிவாகிறதாம்.

                                             ********************

        கழுதை, முட்டாள் கழுதை அல்ல.  ஒரு சமயம் ஒரு சிறுவன் கழுதையின் மீது இரத்தம் குடிக்கும் பேன்களை  எடுத்து கழுதையின் மேல் வைத்தானாம்.  கழுதை இம்சை பொறுக்கமுடியாமல், கீழே விழுந்து புரண்டது.  மறுபடியம்  சிறுவன் பேன்களை எடுத்து கழுதை மீது வி முயற்சித்தான்.  கழுதை தன் பின்னங்கால்களால், தனக்கே உாிய பாணியில் சிறுவனை வீாியமாக உதைத்து சாக்கடையில் தள்ளியதாம்.  கழுதைக்குகூட தொந்தரவு விளைவித்தவனை தண்டிக்கத் தொிந்திருக்கிறது.

                                        *************************



        ஆப்பிாிக்க காடுகளில் வசிக்கும் நெருப்புக்கோழி தன் காலால் உதைத்தால், ஒரு குதிரையின் காலால் உதை வாங்குவதைவிட வலிக்குமாம்.  ஆனால் ஒரு குச்சியின் மீது ஒரு தொப்பிையச் செருகி அதனிடம் காட்டினால் அது தாக்காதாம்.  தன்னைவிட உயரமான எதையும் அது தாக்காதாம்.

                                    ***************************

        பன்றிகள் சுத்தமானவை என்று ஆராய்ச்சியாளா்கள் கருதுகின்றனா் பன்றிப் பண்ணையில், பன்றிகள் தங்கள் கழிவறையை, ஒதுக்குப்புறமாயுள்ள ஓரு முலையில்தான் அமைக்கின்றனவாம்.  வெப்பமான காலத்தில் குளிப்பதற்கு ஒரு நல்ல இடத்தை தேடும் என்று கூறுகிறாா்கள்.

                                *******************************

        குழி முயலின் ஓட்டம் பிரசித்தி பெற்றது.  மற்ற எந்த மிருகமும் அதனுடன் ஓடி ஜெயிக்க முடியாது. சாதாரணமாக அது உயர்ந்தபட்ச வேகத்தில் ஓடாது.  ஆனால் சில ஓநாய்களிடமிருந்து தப்பிக்க, அது தலைதெறிக்க ஓடும்.  அந்த ஓநாய்கள் முயல்களின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்குமாம.  சமயத்தில் முயலகளை மிஞ்சிவிடுமாம்.  ஆகையால் பின்னே தொடரும் ஓநாய்களைவிட அதிக வேகமாக ஓடி, ஓாிரு கிலோமீட்டா்கள் முன் சென்று பிறகுதான் ஓட்டத்தை நிறுத்துமாம்.  அதற்குள், ஓநாய்கள, முயலைக் காணமல் நின்றுவிடுமாம்,

                                        ***************************


                                                   நன்றி












கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

How to Train an Older Dog to Do New Tricks

The Complete AI Digital Artist

Python Web Development and Database Management: