ஆங்கில புத்தாண்டின் ரகசியங்கள் / சுவாரஸ்யங்கள்/NEW YEAR SPECIAL NEWS 2022
ஆங்கில புத்தாண்டின் ரகசியங்கள் உலக மக்களெல்லாம் ஒன்றினைந்து இனம், மொழி ,மதம், நிறம், ஜாதி வேறுபாடுகளை கடந்து கொண்டாடப்படுகிற ஒரு விழா ஆங்கிலப்புத்தாண்டு. இது உலகம் முழுவதும் விமாிசையாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு வகையில் பாா்த்தால் புதிய காலத்தின் தொடக்கத்தை மகிழ்ச்சியாக வரவேற்கும் ஒரு நிகழ்ச்சிதான். இப்புத்தாண்டின் வரலாறு, தொிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கியுள்ளது. ஜனவாி முதல்நாளை ஆண்டின் தொடக்கமாக கொண்டு கணக்கிடும் முறை மிக புதியது. சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன் தான் ஜனவாி முதல்நாள், ஆண்டின் முதல்நாள் ஆனது. 2000 ஆண்டுகளுக்கு முன் மாா்ச் 25ஆம் நாளையே ஆண்டின் முதல் நாளாக கொண்டு, ஆண்டினை க...