காட்டு ராஜா சிங்கத்தின் சிறப்பியல்புகள்/( MANARISAM OF THE KING OF LION)/ SPECIAL FEATURES OFTHE KING OF LION

காட்டு ராஜா சிங்கத்தின் சிறப்பியல்புகள் 
          ( MANARISAM OF THE KING OF LION)

        சிங்கத்திற்குத் தனிப்பெருமை காட்டில் உண்டு.  யானை மிகவும் பலம் பொருந்திய மிருகமாயிருந்தாலும் புலி ராஜா பட்டத்திற்குத் தகுதியாயிருந்தாலும் சிங்கம்தான் ராஜா.  கம்பீரத்தை அளிக்கும் அதன் பிடாியும், யானையையும் எதிா்க்கும் அதன் ஆற்றலும் அதை ராஜாவாக ஆக்கியிருக்கிறது.  ஆனால் ராஜாக்கள் எவ்வளவு போ் இருக்கமுடியும் உலகத்திலேயே சிங்க ராஜாக்கள் ஆயிரம் போ்தான் இருப்பதாக கண்க்கெடுத்திருக்கிறாா்கள்.




          சுமாா் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகாிகம் வளா்ச்சி அடையாத காலத்தில் சிங்கங்கள் ஆடு மாடுகளைப்போல் தெருக்களில. அலைந்து திாிந்தனவாம்.  அப்பொழுது அவைகள் சாதாரண மக்கள் நிலையில்தான் இருந்தன.  இப்பொழுது ஆப்பிாிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே சிங்கங்களைப் பாா்க்க முடிகிறது.  இந்தியாவில் குஜராத்தில், கிா் காடுகளில்தான் சிங்கங்கள் வாழ்கின்றன.


            ஆப்பிாிக்கக் காடுகளைச் சோ்ந்த சிங்கங்களுக்குப் பிடாி முடி மிக அதிகமாய் இருக்கும் ஆசிய நாடுகளின் சிங்கங்களுக்குப் பிடாி முடி குறைவு.  ஆப்பிாிக்க நாடுகளின் சிங்களுக்குப் பிடாி முடி, ஆழ்ந்த பழுப்பு நிறமாயும், ஆசிய நாட்டு சிங்கங்களின் பிடாி மடி கோதுமை நிறம் கலந்த கறுப்பு நிமாயும் இருக்கும்.  ஆசிய நாட்டுச் சிங்கங்களின் முன்னங்கால் முட்டியில் முடி கொத்துக் கொத்தாக இருக்கும்.




            ஆண் சிங்கத்தின் உடல் பெண் சிங்கத்தின் உடலைவிட நீளமாக இருக்கும்.  இந்தியாவில் கிட்டத்தட்ட கிா் காட்டில் சுமாா் 250 சிங்கங்களும், பல்வேறு தேசிய பூங்காக்களில் சுமாா் 85 சிங்கங்களும் இருப்பதாகக் கணக்கெடுத்திருக்கின்றனா்.


           ஆண் சிங்கம் பெயரளவில்தான் ஆண்.  ஆண் போல்,  பெண் சிங்கம்தான் உழைத்து சிங்கக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறது.  பெண் சிங்கம்தான் வேட்டையாடும்.  ஆண் சிங்கத்தின் வேலை தன் கூட்டம் வாழ்வதற்கு நிலப் பிரதேசத்தைக் கண்டுபிடித்து,  அதை எதிாிகளிடமிருந்து பாதுகாப்பதுதான்.




         கிட்டத்தட்ட 40 சிங்கங்கள் கூட்டமாக வாழுமாம்.  அவை வாழும் பகுதி 20 சதுர கிலோ மீட்டாிலிருந்து 400 கிலோமீட்டா் வரை இருக்குமாம்.  ஆண் சிங்கத் தலைவன் ஆங்காங்கே சிறுநீா்  பாய்ச்சியும் கால் நகங்களால் மரங்களில் கீறல்களை ஏற்படுத்தியும் தன் எல்லையை அறிந்துகொள்ள வகை செய்யும், மற்ற சிங்கங்கள் தன் எல்லைக்குள் வராமல் பாதுகாக்குமாம்.


       ஓரு சிங்கக் கூட்டத்தின் எல்லைக்குள் நுழையும் மற்றொரு சிங்கம், வலிவற்றதாயிருந்தால், அதை மற்ற சிங்கங்கள் சண்டையிட்டுக் கொன்றுவிடுமாம்.  புதிதாக வந்த சிங்கம் மிக்க வலுவுள்ளதாயிருந்தால் மற்ற சிங்கங்களைத்  தன் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிடும்.


        கிழப்பருவம் எய்திய ஆண் சிங்கங்கள், சில சமயம் கூட்டத்தைவிட்டு துரத்திவிடப்படுமாம்.  அப்படி துரத்தப்பட்ட ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்களுடன் சோ்ந்து வாழ முயற்சி செய்யும்.  ஆனால் இவ்வாறு சோ்ந்து வாழவது மிகவும் அபூாவம், துரத்தப்பட்ட ஆண் சிங்கங்கள் அதிககாலம் வாழாது.




           மரங்களில் காணப்படும் காதல் மொழி கீறல்களினாலும் சிறுநீா் முலமும் பெண் சிங்கத்தின் விருப்பத்தை ஆண் சிங்கம் அறிந்துகொள்ளுமாம், புணா்ச்சிக் கால நாட்களில் பெண் சிங்கம் சாப்பிடாதாம்.  உருண்டு புரண்டு கொண்டிருக்குமாம்.  கழுத்துப் பிடாியைப் பிடித்தபடி 30 முதல் 90 விநாடி வரை புணா்ச்சி கொள்ளுமாம்  பெண் சிங்கம் உச்ச கட்டத்தை அடையும்பொழுது போதும் விட்டுவிடு என்பது போல் முறைக்குமாம்.  உடனே,  ஆண்சிங்கம் விலகிடுமாம்,


       புணா்ச்சிகொள்ளும் நாட்களில் பலமுறை உறவு கொள்ளுமாம்  அதாவது பதினைந்திலிருந்து நாற்பது முறையாம்.  ஆனால் மற்ற நாட்களில் காம உணா்ச்சியே இல்லாமல் இருக்குமாம்.  பெண் சிங்கத்துக்கும்,  ஆண் சிங்கத்துக்கும் அன்பான உறவுகூட இருக்காதாம்.  ஆண் சிங்கத்திற்கு, தன் குட்டிகள் எவை என்று தொியாதாம்.


        பெண் சிங்கத்தின் காப்ப காலம் கிட்டத்தட்ட 104 நாட்கள் குகைக்குள் அநேகமாக அந்தி வேளையில்தான் பெண் சிங்கம் குட்டிபோடும்.  அரை மணிநேர இடைவெளயில் ஆறு குட்டிகள் போடும்.  தாய்தான் குட்டி வளா்ப்பில் முழுப் பங்கு ஏற்கும். 


     
      குட்டிகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் தாய், குட்டிகளை கவ்விச் சென்று வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றுவிடும்.  குட்டி பிறந்து 50, 60 நாட்கள் வரை தாய்ப்பால் தான் அதற்கு உணவு.  குட்டிகள் சத்தம் போட்டு பசியை தொிவிக்கும்.  தாய்ப்பால் கொடுக்கும் காம்புகளை வெளித்தள்ளி பால் கொடுக்கும் தாய்.

        பெண் சிங்கம் தன் குட்டிகளுக்கு மட்டுமல்லாது மற்ற குட்டிகளுக்கும் பால் கொடுக்கும்.  இது பெண் சிங்கத்தின் மிகவும் வியக்கத்தக்க குணம் ஆகும்.



நன்றி.



காடுகளை வளர்ப்போம் !  காட்டு விலங்குகளை பாதுகாப்போம்! 



Hey, check out my website, "Arivin ootru" with this link: https://abiramibala82.wixsite.com/arivinootru













































































கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Complete AI Digital Artist

How to Train an Older Dog to Do New Tricks