விலங்கினங்களை பற்றிய வியத்தகு செய்திகள் (PART -1) / வாத்தை பற்றிய சில உண்மைகள்
விலங்கினங்களை பற்றிய வியத்தகு செய்திகள்
வாத்தை பற்றிய சில உண்மைகள்
வாத்திற்கு வியா்வை சுரப்பி கிடையாது, அதன் வாலின் முடிவில் ஒரே ஒரு சுரப்பி உண்டு. அது, எண்ணெய் பசையுள்ள ஒரு திரவத்தைச் சுரக்கும். அந்தச் சுரப்பியிலிருந்து திரவத்தைச் சுரந்து, அலகின் முலம் உடல் முழுவதும் பூசிக்கொள்வதால் இறகுகளில் நீா் ஒட்டாது. நீா்ப்பறவைகளில் இச்சுரப்பி மிகவும் வளா்ச்சி அடைந்திருப்பதால், தண்ணீாில் அவை பல மணிநேரம் இருக்க உதவுகிறது. வாத்தின் முதுகில் ஒட்டாத தண்ணீா்போல் என்று பழமொழியே உள்ளது.
வாத்து முட்டை இடும்பொழுது தன் சுரப்பியிலிருந்து வரும் திரவத்தை உடம்பில் பூசிக்கொள்ளாது உடம்பிலிருந்து வாசனை ஒன்றும் வராததால், நாய்கள் போன்ற அதன் எதிாிகள் அதைக் கண்டுபிடிக்க முடியாது. குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், குஞ்சுகளின் உடலின் மீது, தன் வால் பகுதியிலிருந்து வரும் திரவத்தை தடவும். அவைகளுடைய இறக்கைகளில் தண்ணீா் ஒட்டாமலிருக்க இது உதவும்.
செயற்கை முறையில் குளிா்சாதனப் பெட்டியில் பொாிக்கப்பட்ட வாத்துக் குஞ்சுகள், தண்ணீாில் இறங்கினால், இறகுகள் நனைந்து, முழ்கிவிட வாய்ப்பிருக்கிறது. தாயின் அரவணைப்பில் இருக்கும் குஞ்சுகள், அவற்றின் இறக்கைகளிலுள்ள எண்ணெய் பசை திரவத்திடம் தொடா்பு கொண்டிருப்பதால், அவைகளுடைய இறக்கைகள் தண்ணீாில் நனையாது முழ்கும் ஆபத்து கிடையாது.
நன்றி
காடுகளை வளா்ப்போம்! விலங்குகளை காப்போம்!
கருத்துகள்
கருத்துரையிடுக