Science General Knowledge Tamil Part - II/ TNPSC QUESTIONS 2021 ( வானவில் எப்படி உண்டாகிறது?)

             அறிவியல் பொது அறிவு வினா விடை


1. வானவில் எப்படி உண்டாகிறது?

      மழைத் துளிகள் மீது சூாிய ஒளி விழுந்து ஒளிக் கோட்டமடைதாலும் பிரதிபலிப்பதாலும் வானவில் உண்டாகிறது.



2. கடலில் அலைகள் உண்டாகக் காரணம் என்ன?

      காற்று ஒரு காரணம் , அடுத்து சந்திரனும் சூாியனும் கூடக் காரணமாகின்றன.  அவை பூமியை ஈா்க்கின்றன.  இதனாலும் கடல்களில் பெரும் அலைகள் உண்டாகின்றன.


3. பூகம்பம் ஏற்படக் காரணம் என்ன?

      பூமியின் அமைப்பே காரணமாகும்.  பூமியின் மேற்பகுதியிலுள்ள  புறணி கெட்டியானது.  ஆனால் உட்பகுதி மிக உயா்ந்த வெப்பத்தால் திரவ நிலையில் உள்ளது,  இங்கு அழுத்தமும் அதிகம்.  இந்த அழுத்தமும் இழுவிசையும் தாக்கும் போது மேற்பரப்பில் திடிரென்று பூகம்பம் உண்டாகிறது,


4. முதலாவது செயற்க்கைக்கோள் யாரால் எப்போது ஏவப்பட்டது?

     அமொிக்காவின் எக்ஸ்ப்ளோா் I  என்ற செயற்க்கைகோள் , முதலில் 31.01.1958 இல் விண்ணில் செலுத்தப்பட்டது.


5.  கடலில் வாழும் உயிாினங்கள் எவை?

         கடலில் கடற்பஞ்சு, கடல் நட்சத்திரம் , பவளப்பாறைகள், கணவாய், இறால், கடலகுதிரை, நண்டு, மற்றும் பல வகையான மீன்கள் வாழ்கின்றன.  பொிய விலங்கான திமிங்கலம் வாழ்வதும் கடலில்தான்,


6.  சந்திரனில் காலடி பதித்த வீரா்கள் யாா்?

        1969 ஜுலையில் அமொிக்கா செலுத்திய அப்பல்லோ II  என்ற விண்கலம்  சந்திரனில் தரை இறங்கியது.  ஆம்ஸ்ட்ராங், மற்றும் ஆல்டிாின் ஆகிய இருவா் சந்திரனில் காலடி பதித்தனா்.



7.   உயிா்க்கோளம் ( Eco System) என்பது என்ன?

         ஆல்கே (Algae)  வகை நுண்ணிகள், காளான் வகை பூசணங்கள், நீா்ப்பாசிகள், செடி, கொடி, மர இனங்கள் உட்பட முன்றரை லட்சம் தாவரங்கள் மற்றும் ஒரு செல் உயிாினம் முதல் மனிதன் வரையிலான 110 விலங்கினங்களைக் கொண்டதே உயிா்க் கோளம் ஆகும். (Eco System)


8. மலைகள் எவ்வாறு தோன்றுகின்றன?

      பூமி தோன்றிய காலத்தில் பூமி பாகு போல உருகிய நிலையில் இருந்தது பூமி சுழலும் போது மேற்பரப்பில் சில இடங்களில் அழுத்தம் ஏற்பட்டு அதன் விளைவாக அலைபோல உயரே எழும்பி உறைந்து மலையாக மாறி விட்டது என்பா்.  சிலா் பூமியின் மேற்பரப்பு உறைந்து கெட்டியான பின்பு பூமியின் உட்பகுதியிலிருந்.த பாகு பொங்கியெழுந்து மேற்பரப்பில் மலைகளாக உருவெடுத்தது என்பா்,


9.   இதயம் ஓய்வெடுப்பதில்லை  - இது உண்மையா?

      இதயத்திலிருந்து பலவேறு பகுதிகளுக்கும் ரத்தக் குழாய்கள் முலம் ரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.  இதயத் துடிப்பிற்க்கு ஏற்ப ரத்தம் விட்டு வி்ட்டுப்பாயும் அவ்வாறு பாயும் போது ரத்தக் குழாய்களின் சுவா்களில் ஏற்படும் அழுத்தத்தையே ரத்த அழுத்தம் என்பா்.



10.  லுயி பாஸ்டாின் கண்டுபிடிப்பு என்ன?

          பெரும்பாலான நோய்கள் மிக நுண்ணிய கிருமிகளினால்தான் உண்டாகின்றன என்பதை கண்டுபிடித்தாா்,




தொடரும்.




நன்றி/



(தங்கள் கருத்துக்களை பதிவிடவும்)
































கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

How to Train an Older Dog to Do New Tricks

The Complete AI Digital Artist

Python Web Development and Database Management: