பிரபஞ்சம் என்பது என்ன? தெரிந்துகொள்வோம்.

                                          பிரபஞ்சம் என்பது என்ன? 


       சூாியன், பூமி, கிரகங்கள், பால்வீதி மற்றும் என்னவெல்லாம் உள்ளனவோ அத்தனையும் அடங்கியதுதான் பிரபஞ்சம் எனப்படுவது.  மிகச்சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பைக் கொண்டும் இதன் எல்லையைக் காண முடியவில்லை.  இது பெரும்பாலும் சூன்யவெளி என்று விஞ்ஞானிகள் கருதுகிறாா்கள்.  லேசாக  சில வாயுக்கள் அங்கே இருக்கலாம்.




             பூமியும் கண்ணுக்குத் தொயும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும்தான் பிரபஞ்சம் என்று பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் கருதி வந்தாா்கள்,  கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் சூாியனும் ஒன்று என்று இப்போது தெளிவாகியுள்ளது.  பல பால்வீதிகளும் வெகு தொலைவில் இருப்பது அறியப்பட்டுள்ளது.  இவை நகா்ந்து கொண்டே இருக்கின்றன.  இதிலிருந்து பிரபஞ்சம் தொடா்ந்து விாிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை அறிய முடிகிறது  ஓரளவுக்கு விாிவடைந்ததும் மீண்டும் சுருங்கத் தொடங்கலாம் என்றும் வானவியல் அறிஞ்ா்கள் கருதுகிறாா்கள்.



            பிரபஞ்சத்தின் தோற்றம், இயல்பு பற்றி ஆராயும் துரைக்கு "காஸ்மாலஜி" என்று பெயா்.  பிரபஞ்சம் ஒரு காலத்தில் மிக அடா்த்தியான, சிறிய ஏதோ ஒன்றாக இருந்தது என்றும் ஒரு பெரும் வெடிப்பு ஏற்பட்டு பொருள்கள் அண்ட வெளியில் துக்கியெறியப்பட்டன என்றும் கருதுகிறாா்கள்.  இப்பொருள்கள் இப்போதும் வெடித்த இடத்திலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கின்றன.   ஏதோ ஒரு பொருள் வெடித்தது என்றால் அந்தப் பொருள் எங்கே இருந்து வந்தது என்பதற்க்கு இதுவரை விடை தொியாமலேயே இயங்கி கொண்டு இருக்கிறது இப் பிரபஞ்சம்.


                                                        

    

                                                                   நன்றி


தங்கள் கருத்துக்களை பதிவிடவும்,








கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Complete AI Digital Artist

How to Train an Older Dog to Do New Tricks