தொழிலாளர் தினம் வரலாறு/உழைப்பாளர் தினம் வரலாறு/உழைப்பாளர் தினம்/ / தொழிலாளா்கள் தினம்/ மே - 1 தொழிலாளர் தினம்

 தொழிலாளர் தினம் வரலாறு/உழைப்பாளர் தினம்/ உழைப்பாளர் தினம் வரலாறு/தொழிலாளர் தினம்/ மே - 1 தொழிலாளர் தினம்




          உழைப்பாளர்கள் முற்காலத்தில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினர்.  இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை  8 மணி நேரமாக வரையறுத்த அதற்காக போராடி அந்த உரிமையை பெற்ற நாளே மே தினம் ஆகும்.

      1886 ஆம் ஆண்டு மே மாதம் 1 ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்த போராட்டத்தின் அடையாளமே இன்று மே தினமாக கொண்டாடப்படுகிறது.



                இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜாா்ஜ் ஏங்கள், அடாலப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்கு விலையாக தரவேண்டியிருந்தது.  தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

               இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக காராமிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கிடையில் தோழா் ஆகஸ்டு ஸ்பைஸ்  உரையாற்றிக் கொண்டிருந்தார்.  அமைதியான முறையில் நடைபெற்று கொண்டிருந்த இந்த கூட்டத்தை, காவல் துறையினர் கண்முடித்தனமாக தாக்கினர் இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார்.  மேலும் பலர் தாக்கப்பட்டனர்.  இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு,  சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.  இக்கட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸ்ன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்,





          இதில் சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்த போது ஜான்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில் 180 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்டது போகும்படி உத்தரவிட்டனர். பிறகு சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது அப்போது திடிரென்று காவல்துறையினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது அதில் ஒருவர் உயிரிழந்தார்.  70 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து காவல் துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர்.  இதில் பல தொழிலாளரகள் உயிரிழந்தனர்.


         இந்த கலவரத்தை காரணம் காட்டி 1886 ஆம் ஆண்டு மே 1 ம் தேதி தொழிலாளரகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  ஒரு ஆண்டிற்கு மேலாக நீதிமன்றத்தில் விசாரனை செய்யப்பட்டு 1887 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அவர்கள் துாக்கிலிடப்பட்டனர்.  இவர்களில் ஆஸ்கர் நீப் என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  மற்ற தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  இந்த தீா்ப்புக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிா்ப்பு கிளம்பியது.  இதில் லுாயிஸ் லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.   

         இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர்களில் முதன்மையானவர் ஆகஸடு ஸ்பைஸ் ஆவர்.  இவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டத்தை  எதிர்த்த எதிர்வாதம்  செய்தார்.  காவலர்கள் மீது  வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டிருந்தால் அதை நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்வதில் தனக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்று தைரியத்தோடு உரைத்தாா். 

          



                   மற்றொரு தோழர் ஆல்பர்ட் பர்ஸன் நீதிமன்றத்தில் வாதாடுகையில் மரம் கனிகளால் அறியப்படுவதைபோல், தொழிலாளரகள் போர் குணம் மற்றும் தியாகத்தின் முலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள்.  தங்களுக்க அளிக்கப்படும் மரண தண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும் என ஆர்பரித்தார்.

                   ஆஸ்கர் நீபி என்ற தோழர் 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு நான் தலைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாகவும் உரைத்தாா்.

                அடால்ப் பிட்சர் என்ற தோழர் நீதிமன்றத்தில் உள்ள காவலர்கைளப் பார்த்த எள்ளி நகையாடி இவா்களா சட்டத்தின் காவர்கள் இவர்கள் திருடர்கள், அடுத்தவர்களின் சொத்தினை அபகரிப்பவர்கள் என எக்காளமிட்டார்.

           தோழர் மைக்கேல் ஸ்வாப் நீதிமன்றத்தில் தங்களுடை நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோசலிசத்தை அடைவதே என்று  பிரகடனப்படுத்தினார்.  தோழர் ஜாா்ஜ் ஏங்கல் தொழிலாளர்களின் தேவை வேலை, பொழுதுபோக்கு, ஓய்வு இது கூட இன்று இவர்களுக்கு உத்தரவாப்படுத்தப்படவில்லை என்று முழக்கமிட்டார்.




              தோழர் சாமுவேல் பீல்டன் நீதிமன்றத்தில் உரையாற்றுகையில் நாங்கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறாா்கள்.  சோசலிசத்தின் நோக்கம் எவர் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம் என விளக்கினாா்.

   
         சுரண்டப்படும் தொழிலாளா்களை திரட்டி சோசலிச உணர்வுகளை ஊட்டி முதாளித்துவ அமைப்பிற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதை ஒடுக்கவே காவலர்களே குண்டு வீசி சதி செய்து தங்கள் மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளாரகள் என்று தெரிந்தும் மே தின தியாகிகள் சிறிதும்  அஞ்சவில்லை.  அவா்கள் அந்தக் கொலைக் களத்தையும் பிரச்சார மேடையாக பயன்படுத்தி முதலாளித்துவத்தின் முகமுடியை கிழித்தெறிந்தனா்.



     
          நீதிமன்றத்தில் அவா்கள் ஆற்றிய உரையும் ஆதிக்க சக்திகளின் திணறலையும் வரலாற்று ஆவணமாக மாற்றிய அவர்களின் வீரத்தை போற்றி பாராட்ட அவர்களின் வீரத்தை போற்றி பாராட்ட வாா்த்தைகளே இல்லை தீரத்துடன் போராடிய அந்த தோழர்களுக்கு கிடைத்த மரண தண்டனையே முதலாளித்துவத்திற்கு அடிக்கப்பட்ட முதல் சாவு மணியாக மாறியது.  அந்த தோழர்களின் மரணமே உலக தொழிலாளர்களை ஒன்று சேர்ந்திடும் மகத்தான சக்தியாகவும் உழைப்பாளர்கள் கொண்டாடி மகிழும் மே தினமாகவும் இன்று உலகம் எங்கும் உருவெடுத்து உள்ளது .  
  
           இந்த மாபெரும் போராட்டத்தின் வெற்றியே நாம் மே தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.




நன்றி.




உழைப்பே உயர்வு தரும்,























        





    











































































கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TNPSC GROUP-2/4 QUESTIONS PART-4/GENERAL KNOWLEDGE QUESTIONS/ARIVIN OOTRU / பொது அறிவு தகவல்கள்/

30-Day Challenge to kick-start your online business without investment

UPSC Exam Preparation Tips